தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது. 5 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல். விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த துடுகான் பகுதியைச் சேர்ந்த புத்தாதேவ் என்பவரது மகன் பிஜய்குமார் ( 3 8 ) இவர் தற்போது தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாலசுப்பிரமணிய நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்துக் கொண்டு வருகிறார். இவர் குடும்பத்துடன் வசித்துக் கொண்டு அருகில் உள்ள தனியார் நூற்பாலையில் கூலி வேலை செய்து வருகிறார்.

மேலும் இவர் சட்டவிரோதமாக வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

தச்சன் புதூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவில் பழைய நடைபெற்ற வருவதாக தாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் டிஎஸ்பி சிவகுமார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் உதவி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் தலைமை காவலர் பத்ரா, காவலர்கள் காளிதாஸ் மற்றும் நவேந்திரன் ஆகிய போலீசார்ச்சன்புதூர் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டனர்.

அப்பகுதியில் சட்ட விளக்கமாக கஞ்சாவைப் பணியில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை சோதனை செய்த போது அவரிடம் 5 கிலோ 250 கிராம் கஞ்சா என்பது தெரியவந்தது. மேலும் அவரை தாராபுரம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் வருகை செய்தனர். மேலும் குற்றவாளி தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *