ஆத்தூர் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாரியப்பன் அவர்கள் உடனடியாக தனது உயிரை பணயம் வைத்து காவலர்கள் முனியசாமி மற்றும் விக்னேஷ் ஆகியோரின் உதவியுடன் கயிறு கட்டி காவல் ஆய்வாளரும் ஆற்றில் குதித்து அப்பெண்ணை பத்திரமாக மீட்ட வீரதீர செயலை பாராட்டும் விதமாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் காவல் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் காவலர்கள் முனியசாமி, விக்னேஷ் ஆகியோரை சென்னை காவல்துறை தலைமையகத்தில் வைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.