பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்தை தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றன.

தொடர்ந்து மண்டகப்படி தேரோட்டம் திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் இவ்விழாவை காண்பதற்காக பழனி நோக்கி பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரகயாக பக்தர்கள் பழனிக்கு வந்தனர்.

பழனி நகரின் உட்புறப் பகுதியில் அமைந்துள்ள இடும்பன் திருக்கோயிலுக்கு பாதையாத்திரையாக பல லட்சம் பக்தர்கள் வருகை தந்த நிலையில் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக திருக்கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்தனர்.

மேலும் குளிக்குமிடம்,முடிஎடுக்குமிடம், கழிப்பறை தங்குமிடம் உணவு கூடம் சன்னதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தர்களுக்காக சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பக்தர்கள் மனமகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதனையடுத்து திருக்கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இந்த ஆண்டு திருக்கோயில் நிர்வாகம் சார்பாக பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த செய்தி அனைவரிடத்திலும்தெரிவித்த நிலையில் அருள்மிகு இடும்பன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மதுரை அரசு
சட்டக் கல்லூரி பேராசிரியர்கள் அருண், கார்த்திக், வெங்கடேசன், லட்சுமிகுமார், ஆகியோர் திருக்கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்வில் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் வழக்கறிஞர். பேராசிரியர். இராஜா மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தினர் இணைந்து பேராசிரியர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சாமி தரிசனம் செய்து வைத்தனர்.

மேலும் பேராசிரியர்கள் அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக பிரசாதமும் அன்னதானமும் வழங்கி சிறப்பித்தனர் இந்நிகழ்வில் பகுஜன் சமாஜ் கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் நாச்சிமுத்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அசோக் மேத்தா, காளிமுத்து, இளவரசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றன..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *