திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் அமைந்துள்ளது கேத்தனூர் கிராமம் இந்த கிராமத்தில் மேல தெருவில் வசித்து வரும் முருகானந்தம் ராதா தம்பதியினருக்கு இரட்டைப் பிள்ளைகள் அதில் ஒரு ஆண் பிள்ளை குட்டி என்ற சிவப்பிரகாசம் மற்றும் ஒரு பெண் பிள்ளை சிவசங்கரி இருவரும் இரட்டையர்கள். இவர்கள் இருவரும் அருகில் உள்ள அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள்

இந்த நிலையில் கடந்த நான்காம் தேதி வகுப்பறையில் புத்தகங்களை எடுக்கும் பொழுது அதற்கு கீழ் இருந்த சாக்கில் இருந்த கட்டு விரியன் பாம்பு சிவப்பிரகாசத்தை கடித்துள்ளது. அருகிலேயே அவருடைய தங்கை சிவசங்கரியும் இருந்துள்ளார். உடனடியாக ஆசிரியர்கள் சிவப்பிரகாசத்தை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்கள். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சிவப்பிரகாசம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரித்துவாரமங்கலம காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்

பள்ளியில் கட்டிடத்திற்கு எவ்வாறு பாம்பு வந்தது அந்த அளவிற்கு மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்பட்டுள்ளதா என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *