இராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவரணி சார்பாக மொழிக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை போற்றும் விதமாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் தலைமையில் இராமேஸ்வரத்தில் நடைபெற்றது
சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பேசுகையில் தென்தமிழகத்தில் மொழிக்காக போராடி முதன் முதலாக உயிரை விட்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் தான் என்கிற வரலாற்று பெருமையை எடுத்துரைத்து உரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் .எஸ்.எஸ். பழனிமாணிக்கம், வழக்கறிஞர் இரா.மணிமுடி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மேலும் ராமேஸ்வரம் நகரசெயலாளர் ஒன்றியநிர்வாகிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.