திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் ரத்த தானம் முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் ரத்த தானம் செய்தனர்.
அதனை அடுத்து மாணவர்களுக்கு நுரையீரல், கண்,பல், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் பொது சிகிச்சை பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு வழி நடத்தினர். கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட குழுக்களும், லியோ சங்கமும் இணைந்து இந்த ரத்த தான முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சியினை நடத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார். முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் மற்றும் அனைத்து துறைத் தலைவர்களும், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முதலாம் ஆண்டு வேதியல் துறை பேராசிரியர் ரங்கதுரை, இயந்திரவியல் துறை பேராசிரியர் சீதாராமன் கலந்து கொண்டனர்.
லியோ கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் முதலாம் ஆண்டு வேதியல் துறை பேராசிரியர் முனைவர் திலிப் குமார், முதலாம் ஆண்டு இயற்பியல் துரை பேராசிரியர் கோபு ஆகியோர்கள் நிகழ்ச்சிக்கு உண்டான ஏற்பாடுகளை செய்தனர். நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.