வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள தொண்டு வீராசாமி அம்பேத்கார் மிஷன் வளாகத்தில்மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம் மருத்துவ முகாமை முன்னாள் சொரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி (பொ) துவக்கி வைத்தார். தந்தை ஈ வெ ராமசாமியுடன் நட்போடு இருந்து சமூக தொண்டாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தொண்டு வீராசாமியின் சமூக தொண்டை போற்றும் வகையில் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள தொண்டு வீராசாமி அம்பேத்கர் மிஷன் வளாகத்தில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் தொண்டு வீராசாமி அம்பேத்கர் மிஷன் நிறுவனர் டாக்டர் வி. தமிழரசி தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினர்.
இம்முகாமில் தொண்டு வீராசாமி அம்பேத்கார் மிஷன்
பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ரம்யா பெரியசாமி, துணைத்தலைவர் டாக்டர் எம் சி கண்ணன், துணை பொது செயலாளர் எஸ்.பெரியசாமி, உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிராஜுதீன், ஐடி கம்பெனி மனித வளம் என்.விவேகானந்தன், எஸ். ஸ்டாலின்,சமூக சேவகர் மாராடி சேகர், ராஜேந்திரன், செவிலியர் ஜெயஸ்ரீ ,ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்று தந்து தொண்டு உள்ளத்தோடு பணியாற்றி வரும் பள்ளி ஆசிரியைகள் சரண்யா,பிரேமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இம் முகாமில் பெருமாள்மலை அடிவாரத்தை சுற்றியுள்ள சொரத்தூர் , குன்னுப்பட்டி, கிழக்குவாடி, கீரம்பூர், செங்காட்டுப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த மாபெரும் மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை தொண்டு வீராசாமி அம்பேத்கார் மிஷன் சார்பில் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ரம்யா பெரியசாமி சிறப்பாக செய்திருந்தார்.