வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் கே என் ராமஜெயம் திடலில் திமுக மேற்கு ஒன்றியம் மாணவர் அணி சார்பில் 25/01/2025 அன்று மாலை 6 மணியளவில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது .
இக்கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் காடுவெட்டி ந.அகத்தீஸ்வரன் வரவேற்புரையாற்றினார் .இதில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், சாவல் பூண்டி மா சுந்தரேசன், நந்தனம் நம்பிராஜன் ஆகியோர் தமிழ் மொழிக்காக உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகள் பற்றி சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சிவ சரவணன்,நகர செயலாளர் மெடிக்கல் ந.முரளி, மு.துறையூர் ஒன்றிய பெருந்தலைவர் சரண்யா மோகன் தாஸ், துறையூர் நகர தலைவர் செல்வராணி மலர்மன்னன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் சோபனபுரம் கனகராஜ், மயில்வாகனன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா,உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள்
முத்துசெல்வன்,அசோகன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் விளையாட்டு அணி சுரேஷ் குமார், சுற்றுச்சூழல் அணி அம்மன் பாபு, வழக்கறிஞர் அணி நரேஷ் குமார், இலக்கிய பேரவை அணி லெனின்,வர்த்தக அணி திருமூர்த்தி, மகளிர் அணி கிருபா, பேச்சாளர் துரை பாண்டியன், மு.மாவட்ட கவுன்சிலர் தமயந்தி, மாவட்ட பிரதிநிதிகள் கண்ணனூர் குமார்,நடுவலூர் செல்வகுமார், மற்றும் கண்ணனூர் ரவிச்சந்திரன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கீரம்பூர் முத்துதுரை, ஸ்டுடியோ சசிகுமார்,மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், பழனிவேல்,முருகேசன், தர்மன் விஜய், சுரேஷ், பழனிசாமி மற்றும் ஐடி விங்க் சேகர்,மெடிக்கல் பிரேம்குமார்,அன்பு காந்தி, தர்மன் லவன்,ஆதனூர் ரவி மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ரெங்கநாதபுரம் பிரபாகரன் நன்றி உரையாற்றினார்.