தாராபுரம்
செய்தியாளர் பிரபு
9715328420
தாராபுரம் 9.ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவியை தாக்கி பாலியல் தொந்தரவு தனியார் வாகன ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள
கருங்காலிவலசு, கிராமத்தைச் சேர்ந்தவர்
கணேசன் இவரது மனைவி.வேளாங்கண்ணி. இவர்களது மகள்
கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று மாலை பள்ளி படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊரான கருங்காலி வலசு செல்வதற்காக கொளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தோழிகள் இரண்டு பள்ளி மாணவிகளும் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது கொளத்துப்பாளையத்தை சேர்ந்த தனியார் வாகன ஓட்டுனர் கனகராஜ், பள்ளி சிறுமிகளை பார்த்து மது’ போதையில் தகாத வார்த்தைகள் பேசி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார்.
அதற்கு சிறுமிகள் சத்தமிட்ட போது சிறுமியின் கையை பிடித்து இழுத்து கன்னத்திலும் தலையிலும் கனகராஜ் ன் கையால் தாக்கியுள்ளார்.
இதில் சிறுமி நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் அப்பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் சிறுமியை கனகராஜ் இடம் இருந்து மீட்டெடுத்து தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தனியார் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு குளுக்கோஸ் செலுத்தப்பட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருகிறார்.
சிறுமியை தாக்கி விட்டு தப்பி ஓடிய கனகராஜை போலீசார் தேடிய நிலையில் அவரை இராமபட்டிணம் என்ற இடத்தில் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த
தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடன் இருந்த இரண்டு சிறுமிகளும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காத பட்சத்தில் அவர்கள் இருவரும் வீட்டுக்கு சென்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊதியூர் பகுதியில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த நிலையில் தாராபுரம் பகுதியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் தாராபுரம் ஊதியூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளி களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் மேலும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கனகராஜ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.