இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 62−ஆம் ஆண்டு விழாவில் ராமநாதபுரம் மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு கல்வியின் அவசியத்தையும் கல்விக்காக திராவிட மாடல் அரசு செய்து வருகிற மகத்துவங்களையும் மாணவ செல்வங்களிடம் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுவழங்கி பாராட்டினார் உடன் கழக நிர்வாகிகளும் ஆசிரியர்கள் மாணவ. மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.