கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் ஏற்கனவே பழைய சார் பதிவாளர் அலுவலகம் இருந்தபோது மகாத்மாகாந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இருந்தது.
பழைய அலுவலகம் இடிக்கப்பட்டு புதிய அலுவலகம் கட்டப்படவிருந்த சூழ்நிலையில் அந்த படங்கள் அகற்றப்பட்டன.
தற்போது புதிய அலுவலகம் கட்டப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

ஆனால் தலைவர்கள் படங்கள் பொருத்தப்படவில்லை என்றும், இதுகுறித்து கேட்டால் இவ்வலுவலக அதிகாரிகள் ஏதேதோ சாக்கு போக்கு கூறி அலட்சியப்படுத்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் டாக்டர் அம்பேத்கார் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை மங்கலம்பேட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தில் உடனடியாக பொருத்த வேண்டும் என வலியுறுத்தி, இந்திய குடியரசு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அம்பேத்கர் இயக்கங்கள் சார்பில், இந்திய குடியரசுக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மங்காபிள்ளை தலைமையில், மங்கலம்பேட்டை சார்-பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது..

வி.சி.க வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, இந்திய குடியரசு கட்சி மாவட்ட பொருளாளர் கணேசன், வி.சி.க ஒன்றிய துணை செயலாளர் ராம்குமார், புரட்சி பாரதம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், விசிக பேரூர் செயலாளர் அம்பேத், குடியரசு கட்சி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ராமையன், நகர தலைவர் கதிர்காமன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அலிபாபு, துணை செயலாளர் ஆறுமுகம், விசிக பிரமுகர்கள் கண்ணன், திருமா ஐயப்பன், மாவட்ட அமைப்பாளர் துரை முருகன் உட்பட பலர் கலந்துகொண்டு கண்டனக் முழக்கங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த மங்கலம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், தனிப்பிரிவு ஏட்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக, அவர்கள், சார்-பதிவாளர் கலைவாணியிடம், பொதுமக்களை அலட்சியப்படுத்தும் அலுவலகப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *