தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர்
தஞ்சையில் 1976 ஆம் ஆண்டு 10 ம் வகுப்பில் ஒன்றாக படித்த மாணவர்கள் “50 ஆண்டுக்கு பிறகு மீண்டும் குடியரசு தினமான இன்று சந்தித்து பள்ளிபருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டவர்கள். தாங்கள் 1976 ம் ஆண்டு படித்த 10 ம் வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியவர்கள் தங்கள் ஆசிரியர்களை கெளரவுரவப்படுத்தி மகிழ்ந்தனர்.
தஞ்சையில் நூற்றாண்டு கண்ட பிளேக் மேல்நிலைப் பள்ளி கல்வியிலும், ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளிலும் மாநில அளவில் புகழ்பெற்ற பள்ளி இங்கு 1976 ம் ஆண்டு ஒன்றாக படித்த 60 மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தினத்தில் தாங்கள் படித்த பிளேக் மேல்நிலைபள்ளியில் ஒன்று கூடிய அவர்கள், பள்ளிக்கூடத்திற்கு மாணவர்களின் பயன்பாட்டுக்காக கம்ப்யூட்டர் உபகரணங்களை வழங்கினார்கள் பின்னர் வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியையை பாடம் எடுக்க சொல்லி பழைய நினைவுகளில் மூழ்கினர்.