சேர்ந்தமரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சார்ந்த வெள்ளாளன்குளம் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொது சுகாதார துறை சார்பில், டெங்கு விழிப்புணர்வு, கொசு உற்பத்தியை தடுத்தல், தொழுநோய் விழிப்புணர்வு, நோயின் தன்மை, சிகிச்சை முறைகள் மற்றும் காசம்நோய் பற்றி விழிப்புணர்வு, சிகிச்சை முறைகள் பற்றி கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட மலேரியா அலுவலர் ராமலிங்கம், பூச்சியில் வல்லுனர் மணிகண்டன், மருத்துவமல்லா மேற்பார்வையர் முருகன், சுகாதார ஆய்வாளர் சுப்பையா மற்றும் காசநோய் மேற்பார்வையாளர் மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியில் தொழுநோய் மற்றும் காசநோய் பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.