மணலி கொசப்பூரில் மழை நீர் கால்வாயில் விழுந்த மாடு
பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
சென்னை மணலியை அடுத்த கொசப்பூர் பகுதியில் திறந்திருந்த மழை நீர் கால்வாயில் மாடு ஒன்று தவறிவிழுந்து உள்ளது இந்நிலையில் அப்பகுதியில் பருப்பு குடோன் வைத்திருக்கும் சூர்யா என்பவர் அப்பகுதியாக சென்ற பொழுது மழைநீர் கால்வாயில் ச த்தம் வந்ததை கண்டு பார்த்துள்ளார்
அப்பொழுது மாடு ஒன்று விழுந்து கிடப்பதை பார்த்து மணலி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மணலி தீயணைப்பு துறையினர் மழை நீர் கால்வாயில் விழுந்த மாட்டை கயிறு மூலம் கட்டி மேலே தூக்கி பத்திரமாக மீட்டனர் மாட்டின் உரிமையாளர் யார் என தெரியாததால் மாடு பத்திரமாக மீட்கப்பட்டு வெளியில் விடப்பட்டது
மழைநீர் கால்வாயில் விழுந்த மாட்டை உடனடியாக பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்