தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப்ராஜ்.
தஞ்சாவூர், பிப்- 8.
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை மங்களபுரம் தூய லூர்து அன்னை ஆலய தேர் திருவிழா மற்று சிறப்பு திருப்பலி நாடைபெற்றது.
தஞ்சை தூய லூர்து அன்னை ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பேராயர் சகாயராஜ் கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தினமும் நவநாள் பிரார்த்தனை திருப்பலி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று மாலை 6 மணிக்கு நவநாள் ஜெபமாலை மற்றும் ஆடம்பர கூட்டுப் பாடல் திருப்பலி நடந்தது. பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் திருவுருவம் தாங்கிய திருத்தேர் பவனி நடந்தது.
விழாவில் தஞ்சை அண்ணா நகர் பங்கு தந்தை செபாஸ்டியன் பெரியண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பலியில் ஏராளமான பங்கு பெருமக்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 8 மணிக்கு திருப்பலி முடிவடைந்தவுடன் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மரியசூசை அடிகளார் தலைமையில், உதவி பங்கு தந்தை இன்பன்ட் ஜோதிபர், அருட்சகோதரிகள், பங்கு மன்றம், பக்த சபைகள், அன்பியங்கள், பங்கு இளைஞர்கள் மற்றும் பங்கு மக்கள் இணைந்த செய்து இருந்தனர்.