எ.பி. பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரிடம் வாழ்த்து பெற்ற அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மணிகண்டன்.
பெரம்பலூர்.ஜன.30. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு மாவட்ட நகர ஒன்றிய கழக சார்பில் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய புரட்சித்தலைவி அம்மா பேரவை ஒன்றிய செயலாளராக மணிகண்டன் என்பவரை கட்சியின் பொது செயலாளரும் , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடியார் அறிவித்திருக்கிறார். அதற்காக சிபாரிசு செய்த பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வனை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் கட்சியின் தொண்டர்கள் உடன் இருந்தனர் .
இதேபோல் செந்துறை ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் ஒன்றிய செயலாளர் அழகு துரையும் தனது ஆதரவாளர்களோடு சென்று மாவட்ட செயலாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.