மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் தியாகிகள் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார்.
ஆசிரியை அருவகம் வரவேற்றார். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, பெற்றோர்களுக்கு செய்த சத்தியம், தென் ஆப்பிரிக்கா வில் காந்தியடிகளின் போராட்டங்கள், அஹிம்சை முறை, உப்பு சத்தியாக் கிரகம், ரவுலட் சட்டம், ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், மதுரைக்கும் காந்திக்கும் உள்ள தொடர்பு, மதுரை காந்தி மியூசியம், மதுரை காந்தி பொட்டல், அரையாடை நிகழ்வு வரலாறு, தீண்டாமை ஒழிப்பு, தொழு நோயாளிகள் மீதான அக்கறை ஆகியவை குறித்து தலைமை ஆசிரியர் பேசினார்.
அனைவர் மீதும் அன்பாக இருப்போம் என மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். மகாத்மா காந்தி பற்றி வினாடி வினா நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மகாத்மா காந்தி பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. ஆசிரியை அம்பிகா நன்றி கூறினார். விழாவில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.