திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார்பதிவாளர் அருகில், உப்பு சத்தியாகிரகம் இயக்கம் இளைஞர் அணி சார்பில் மகாத்மா காந்தியடிகள் 78-வது நினைவு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உப்பு சத்தியாகிரக இயக்கம் திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி மாவட்ட தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் தலைமை தாங்கினார்.
திமுக பிரதிநிதிகள் வி. சி. ராஜேந்திரன், தர்மராஜன் ஆர்மி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட பிரதிநிதி கரிகாலன் மகாத்மா காந்தியடிகள் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அனைவராலும் காந்தியடிகளுக்காக அஞ்சலி செலுத்தினர். பின்னர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் சீனிவாசன், சிவனேசன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வலங்கைமான் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர், தன்னார்வலர் டிடி வேலு அனைவருக்கும் நன்றி கூறினார்.