தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ்
சார்பாக மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.இராஜேந்திரன்
தலைமையில் நினைவு அஞ்சலி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய மாநகர காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தேசப்பிதா மகாத்மா காந்தி இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக செய்து தியாகங்களையும் அவர் எதற்காக யாரால் சுடப்பட்டார் என்றும், சுதந்திரத்திற்கு பின் மகாத்மா காந்தியின் கொள்கையின் கிராம பொருளாதாரம், கிராம சுயாட்சி மூலம் இந்த நாடு பெற்ற வளர்ச்சியையும். பிஜேபினர் மகாத்மா காந்தியின் கொள்கையை குழி தோண்டி புதைத்து விட்டு இந்திய நாடும் நாட்டு மக்களும் படும் துயரங்களையும், துயரங்கள் கலைய காங்கிரஸ் கட்சியினர் முனைப்போடு செயல்பட்டு காந்தியின் கொள்கைகளை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில்அமைப்பாளர் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி வழக்கறிஞர் எம்.ஜான்சன் மற்றும் மாநகர காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.