திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அவரது அறிவுறுத்தலின்படி தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.மகேஷ் அவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர். இரமேஷ் தலைமையில் “தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.