திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து நடு நாராசம் ரோடு வழியாக கும்பகோணம்- மன்னார்குடி செல்லும் ஒரு வழி பாதையில் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியில் வேகத்தடை உள்ளது.
இந்த வேகத்தடை ஆனது அதிக உயரமாகவும் அருகில் சுமார் 2 அடி உயரத்திற்கு பெரிய பள்ளமாகவும் உள்ளது. இதனால் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மாணவ, மாணவிகள், பெண்கள் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றனர்.
மேலும் கனரக வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். ஆகவே உடனடியாக வலங்கைமான் பேரூராட்சி மன்ற நிர்வாகம் இந்த வேகத்தடை உள்ள பகுதியில் உள்ள சுமார் இரண்டு அடி பள்ளத்தை உடனடியாக சீரமைத்து விபத்துகளை தடுக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் திருவாரூர் மாவட்ட தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.