கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவராக போச்சம்பள்ளியை சேர்ந்த கவியரசு (46) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாகத் தேர்வு செய்யப்படுவது வழக்கம். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்பட்டு புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடக்கும். அந்த வகையில், தமிழக பாஜகவில் கடந்த செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கின.
இதையடுத்து, உட்கட்சித் தேர்தல் மூலமாக, கிளை தலைவர், மண்டல தலைவர், மாவட்டத் தலைவர் என பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி பாஜக அலுவலகத்தில் நேற்று மாலை மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில், மாவட்ட தேர்தல் பொருப்பாளர் வெங்கடேசன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவராக கவியரசு-வை அறிவித்தார்.
அப்போது பாராளுமன்ற துணை பொருப்பாளர் பாலகிஷ்ணன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர். மாவட்ட தலைவராக அறிவித்தவுடன் தொண்டர்கள் உற்சாகமாகி ஆளுயர மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்போது பேசிய கவியரசு, கட்சியின் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு, ஏற்ற தாழ்வு இல்லாமல் ஒன்று கூடி கட்சியை வலுப்படுத்துவேன் என பேசினார்.