அலங்காநல்லூர்

மதுரை மாவட்ட அலங்காநல்லூர் பகுதியில் குறிஞ்சி சுகம் வட்டாரம் மற்றம் சுகம் அறக்கட்டளை இணைந்து களஞ்சியம் அலுவலகத்தில் வளரிளம் பெண்களுக்கான
முன் மாதிரி கல்வியாளர்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது 200வளர் இளம் பெண்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் வள்ளி, சுகம் வட்டார ஒருங்கிணைப்பாளர் வினோதினி,வட்டாரம் மற்றும் பயிற்சி நோக்கம் பற்றி விளக்கினார்.

மதுரை கிராமப்புறமண்டல சுகாதாரதிட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தையா, முன்மாதிரி கல்வியாளர் பொறுப்புகள் பற்றி கூறினார். யோகா பயிற்சியாளர் விஜயலட்சுமி,வளரிளம்பெண்களுக்கு திறன்மேம்பாட்டு யோகா சொல்லிக் கொடுத்தார் பயிற்சிக்கான ஏற்பாட்டினை பயிற்சியாளர் மற்றும் தலைவிகள் இணைந்து செய்திருந்தனர்.

சுகம்வட்டார சுகாதார பணியாளர்ஐஸ்வர்யா,நன்றி தெரிவித்தார். மேலும் மண்டல சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தையா வளரிலாம் பெண்களுக்கான சுய சுகாதாரம் இரும்பு சத்து நிறைந்த ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் நல்ல தொடுதல் தவறான தொடுதல் குறித்து விழிப்புணர்வு குறித்துபேசினார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *