தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்( EVM) வாக்களிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் உள்வட்டத்திற்குட்பட்ட குண்டடம் கிராமத்தில் இன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மூலம் வாக்களிக்கும் முறையை விளக்கும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில், நடமாடும் விழிப்புணர்வு வாகனம் மூலம் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, பொதுமக்கள் நேரடியாக வாக்குப்பதிவு செய்து பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் முறை, வாக்காளர் அடையாளம் சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர். வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி, தவறின்றி வாக்குப்பதிவு செய்யும் வகையில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.