தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. தாராபுரம் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா மற்றும் நகரக் கழக செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக தாராபுரம் பகுதியில் தாராபுரம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கி தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு வழங்கினார். நகராட்சியில் பணிபுரியும் 227 தூய்மை பணியாளர்களுக்கு பாலை உணவுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் மற்றும் திமுக நகர மன்ற கவுன்சிலர்கள், நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *