பாபநாசம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா….

பேரூராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

செயல் அலுவலர் குமரேசன் பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா முன்னிலை வகித்தனர் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தினை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம்நாத் பைரன், பிரகாஷ், பாலகிருஷ்ணன்,முத்துமேரி மைக்கேல்ராஜ், புஷ்பா சக்திவேல்,தேன்மொழி உதயகுமார்,மாற்று திறனாளி உறுப்பினர் கலியமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

காலை உணவு திட்டத்தில் கேசரி,வடை, வெஜிடபிள் சாதம்,தயிர் சாதம் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *