அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது கிராம உதவியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் காத்திருப்பு போராட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ப சுரேஷ் தலைமை தாங்கினார் டி என் ஆர் வி ஏ ஏ மாவட்ட தலைவர் பழனிவேல் வரவேற்றுப் பேசினார்

மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வை கணபதி மாவட்ட துணை செயலாளர் முகுந்தன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார்கள் மாவட்ட செயலாளர் தோழர் ஏ ஆர் கார்த்திக் மாநில துணைச் செயலாளர் தோழர் ஆர் முருகானந்தம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் பி செல்வகுமார் ஜெகநாதன் லட்சுமி தவசீலன் வைத்தியநாதன் ராஜராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

டி என் ஆர் வி ஏ ஏ மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நிறைவுறையாற்றினார் எஸ் வேல்முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் D.கிரேடு வழங்க கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *