தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கத்தை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்

இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுவதை தரமாக உணவு பரிமாறப்படுகிறதா என்பதை அவர்களுடன் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அவர்களுடன் எளிமையாக அமர்ந்து உணவு அருந்தி உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார் உடன் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் ஆணையாளர் சுதா பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் ஜலாலுதீன் சுகாதார அலுவலர் மணிகண்டன் மணிகண்டன் கட்டிட ஆய்வாளர் சுகதேவ் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *