தமிழ்நாடு தீ தடுப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் திருவாரூர் மாவட்ட அலுவலர் ஹட்கீம் பாட்சா உத்தரவின்படி மன்னார்குடி தீ அணைப்பு நிலையத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மன்னார்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் ப.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் நிறுவனங்களில் தீ விபத்துக்கள் ஏற்படும் காரணம், தீ அணைப்பான்களை கையாளும் முறைகள்,தீ காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வீர செக்யூரிட்டி நிறுவனர் MC சேகரன், மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பாதுகாவலர்கள் பலர் பங்கேற்றனர்.