குடியிருப்பு மனைக்கு குடி மனை பட்டா வழங்க கோரி காத்திருப்பு கவன ஈர்ப்பு போராட்டம்


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..


திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர் பகுதியில் உள்ள எட்டாவது வார்டு துர்க்காலயா ரோடு பகுதியில் சுமார் 300 குடும்பங்களுக்கும் மேல் இனாம் நிலங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளில் நீண்ட நாட்களாக குடியிருந்து வருகின்றனர்..


மேலும் இதுபோல திருவாரூர் பகுதியில் உள்ள புலிவலம், விஜயபுரம், மடப்புரம், கிடாரங்கொண்டான் மற்றும் திருவாரூர் சுற்றியுள்ள பெருந்தரக்குடி,அம்மையப்பன், ஆணை வடபாதி, இளவங்கார்குடி மேலும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிமனை பட்டா இல்லாமல் வாழும் அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் தாங்கள் வசிக்கும் குடியிருப்பு மனைக்கு உடனே குடிமனை பட்டா வழங்க வேண்டும்..என்பதை வலியுறுத்தி காத்திருப்பு கவன ஈர்ப்பு போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.


“குடி இருப்பவர்களுக்கு உரிமை உள்ள இனாம் நிலங்களை அறநிலையத்துறை நிர்வாகம் கோவில் நிலம் என்று சொல்லி அச்சுறுத்துவதை கைவிட்டு.. மனையில் குடியிருப்பவர்களுக்கே உரிமை என்பதை ஏற்று மாவட்ட நிர்வாகமே பட்டா வழங்க வேண்டும்…

மேலும்,எளிய மக்களை துன்புறுத்தி வரும் இந்து சமய அறநிலையத்துறையின் 78 மற்றும் 79வது சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகள் கடந்தும் குடிமனை பட்டா இன்றி அரசின் எந்த சலுகைகளும் பெறாமல் அகதிகள் போல் சொந்த மண்ணில் வாழும் பல லட்சம் குடும்பங்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி உடனே குடிமணை பட்டா வழங்க உறுதி செய்ய வேண்டும்”

உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டது..


இந்த நிகழ்வில்.. தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இளங்கோவன், செயலாளர் சண்முகசுந்தரம், குடந்தை சுவாமிநாதன் உள்ளிட்ட தமிழ்நாட்டு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *