திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், கழக அமைப்புச் செயலாளரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.
இந்த பிரச்சாரத்தில்.. வீடு வீடாக சென்று..தற்போது திமுக அரசின் ஐந்தாண்டு ஆட்சியில் விலைவாசி உயர்வால் ஏற்பட்ட இழப்புகளை தெரிவிக்கும் விதமாக கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த விலைவாசியையும்.. தற்போதைய திமுக ஆட்சியில் உள்ள விலைவாசியையும் ஒப்பிட்டு மாதாந்திர செலவு மற்றும் கூடுதல் சுமை குறித்த விலைவாசி ஒப்பிட்டு விபரம் அடங்கிய பில்லை உடனுக்குடன் அச்சிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் காமராஜ்.. மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை மற்றும் மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட மாதாந்திர செலவு விபரம் ஆகியவை களை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் கேட்டறிந்தார்.. கடந்த அதிமுக ஆட்சி… மற்றும் தற்போதுள்ள திமுக ஆட்சியில் உயர்ந்துள்ள விலைவாசியின் வித்தியாசத்தை ஒவ்வொரு குடும்பத்தாரிடமும் விவரித்து கூறினார்.
மேலும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அறிவித்த முத்தான தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்வில்.. முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே கோபால், நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி பி ஜி அன்பழகன், தகவல் தொழில்நுட்ப தஞ்சை மண்டல இணைச் செயலாளர் செல் சரவணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சம்பத், நன்னிலம் நகர செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பேரளம் நகர செயலாளர் திலகம் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.