தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கத்தை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்
இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சியில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுவதை தரமாக உணவு பரிமாறப்படுகிறதா என்பதை அவர்களுடன் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்களுடன் எளிமையாக அமர்ந்து உணவு அருந்தி உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார் உடன் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் ஆணையாளர் எஸ் பார்கவி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் ஜெயராமன் திமுக நகரச் செயலாளர் சூர்யா பாலமுருகன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்