செங்கல்பட்டு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் பணியாற்றம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஜனவரி மாதம் நிலுவை சம்பளத்தை உடனடியாக
வழங்க வேண்டும்.
மாதம்தோறும் ஒன்றாம் தேதி ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் COITU சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.
மேலும் நாங்கள் பணிபுரிந்த ஜனவரி மாதத்திற்கான ஊதியம் இதுவரை TNHSP மற்றும் EMRI-GHS நிர்வாகத்தால் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இது ஊதியம் வழங்கல் சட்டம்,1936 பிரிவு 4 மற்றும் 5 மற்றும் தொழிற்தகராறுகள் சட்டம்,1947 அட்டவணை V படி சட்டத்தை அமலாக்க மறுப்பது என்ற வகையில் நேர்மையற்ற தொழில் நடைமுறையாகும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம் எனவே, தொழிலாளர் நலத்துறை மூலம் சம்பந்தப்பட்ட EMRI-GHS நிர்வாக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன் வேற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.