சென்னை திருவொற்றியூரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் திருமதி சீமா அகர்வால் டிஜிபி அவர்களின் ஆணையின்படியும் இணை இயக்குனர் திரு சத்யநாராயணன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் சென்னை புறநகர் மாவட்ட அலுவலர் திரு லோகநாதன் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பாதுகாவலர் காவலாளிகளுக்கு தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன
திருவொற்றியூர் மற்றும் எண்ணூர். மணலி தீயணைப்பு நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பாதுகாவலர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்
மருத்துவமனை மற்றும் தொழிற்சாலைகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் எதுபோன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டன
மேலும் பாதுகாப்பு உபகரணங்கள் தீயணைப்பான் மற்றும் ரசாயன தீ அணைப்பான் மணல் தண்ணீர் கொண்டு தீயை கட்டுப்படுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது
மருத்துவமனைகளில் சிக்கியிருப்பவர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் எவ்வாறு மீட்க வேண்டும் என்பதெல்லாம் குறித்து காவலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன
பின்னர் விபத்து ஏற்பட்டவுடன் துரிதமாக செயல்படும் ஒத்திகை நிகழ்வில் பங்கேற்ற காவலாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்,