C K RAJAN Cuddalore District Reporter
9488471235
நெய்வேலி, இந்திய பொறியாளர்கள் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், என்எல்சிஐஎல் மின் துறை இயக்குநர் வெங்கடாசலம் பேச்சு…
இந்திய பொறியாளர்கள் கழகத்தின் சார்பில் நெய்வேலி உள்ளூர் மையத்தில், நேற்று “கட்டுமானத் தொழிலில் கட்டுமான இடிப்பு மற்றும் தொழிற்சாலை கழிவுகளின் பயன்பாடு” என்ற தலைப்பில், சிவில் பிரிவில், ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய பொறியாளர்கள் கழகத்தின் நெய்வேலி பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், என்எல்சி இந்தியா நிறுவனம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் கடலூரில் உள்ள சி.கே. பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தின.
என்எல்சி இந்தியா நிறுவன மின்துறை இயக்குநரும், இந்திய பொறியாளர்கள் கழகத்தின் நெய்வேலி மையத்தின் தலைவருமான பொறியாளர் வெங்கடாசலம் இந்த கருத்தரங்கில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பூமி என்பது நாம் மரபு உரிமையாகப் பெற்ற சொத்து அல்ல என்றும், மாறாக நமது வருங்கால சந்ததியினருக்கு நாம் செலுத்த வேண்டிய கடன் என்றும் ஆகவே அதைப் பாதுகாப்பாக அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தலைவர் தனது உரையில் கூறினார்.
மனிதர்கள், பூமியில் உள்ள மொத்த உயிரினங்களின் வெறும் 0.01% ஆக மட்டுமே உள்ளனர். ஆனால் நாம் பூமியிலிருந்து கிட்டத்தட்ட அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றோம். எதையும் கழிவாக கருத முடியாது, ஏனெனில் அனைத்திற்கும் ஒரு சில மதிப்புகள்
உள்ளன.மேலும் சரியான தொழில்நுட்பம் மூலம் அவற்றைப் பயனுள்ளதாக மாற்ற முடியும்.
கௌரவ செயலாளர் பொறியாளர்
இரணியன் வரவேற்புரையாற்றினார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் சிவில் பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர் நாகன் இந்த கருப்பொருள் குறித்து சிறப்புரையாற்றினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் திருஞானசம்பந்தம் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். நிகழ்ச்சியின் நிறைவாக
இணை கௌரவ செயலாளர், பொறியாளர் . அன்பழகன் நன்றியுரை ஆற்றினார்.