மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளி
களுக்கு 38 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மு.க ஸ்டாலின் மாற்றுத்திறனாளி கள் நலனில் தனித்த அக்கறை செலுத்தி பல்வேறு திட்டங்களை அவர்தம் நலன் காக்க செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளி
களுக்கு சுமார் ரூ 38 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாற்றுத்திறனாளி
களிடம் நேரடியாக வழங்கினார்.
மதுரை மத்திய தொகுதி, ஆரப்பாளையம் பகுதிக்குட்பட்ட 21, 22, 57, 58 வார்டுகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள் 8 நபர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை மேலப்பொன்னகரம் 2வது தெரு திராவிடன் படிப்பகம் அருகில் வழங்கினார். தொடர்ந்து எல்லீஸ் நகர் பகுதிக்குட்பட்ட 60, 61, 75 வார்டுகளில் மாற்றுத் திறனாளி கள் 6 நபர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, பயிற்சி கலெக்டர் வைஷ்ணவி பால், ஆரப்பாளையம் பகுதிக்குட்பட்ட பகுதி செயலாளர் எஸ் எஸ். மாறவர்மன், மாமன்ற உறுப்பினர் கள் மகாலெட்சுமி ஜென்னியம்மாள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.