காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குடல் புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் பணி இன்று (10.02.2026) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி அரசின் நலவழித்துறை,காரைக்கால் மாவட்ட சுகாதார இயக்கத்தின் சார்பில் 1 முதல் 19 வயதிற்க்குள்பட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு குடல் புழு நீக்கும் மாத்திரைகள் முதல்கட்டமாக வழங்கப்பட்டது.
மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி காரைக்கால் தலத்தெரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் துணை மாவட்ட ஆட்சியர் செல்வி பூஜா IAS அவர்கள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் R.சிவராஜ்குமார்,
மேல்நிலை கல்வித்துறை துணை இயக்குனர் திருமதி. ஜெயா, முதன்மை கல்வி அதிகாரி திருமதி விஜய மோகனா, நலவழித்துறை நோய்த்தடுப்பு திட்ட அதிகாரி டாக்டர் தேனாம்பிகை நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் S.சேகர்,
பள்ளியின் முதலவர் பாண்டியகுமாரி,சுகாதார ஆய்வாளர் சிவவடிவேல், கிராமப்புற செவிலிய மேற்பார்வையாளர் விஜயலட்சுமி மற்றும் கிராமப்புற செவிலியர்கள்,
சுகாதார உதவியாளர், ஆஷா பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.
காரைக்கால் மாவட்டம் முழுவதும் சுமார் 52600 மாணவ மாணவியர்களுக்கு குடல் புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றது.இம்மாத்திரையை உட்கொள்வதின் மூலம் குடலில் உள்ள புழுக்கள் நீக்கப்பட்டு மாணவர்களின் உடல் நலம் மேம்பட்டு இரத்தச்சோகை வரமால் தடுக்கப்படும்.
ஊட்டசத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பாதிப்பகள் வராமால் தடுக்கப்படும்.ஆகவே மாணவர்கள் குடல் புழு மாத்திரையை அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் உட்கொண்டார்களா என்பதை ஆசிரியர்களும்,பெற்றோர்களும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நலவழித்துறை துணை இயக்குனர் கேட்டுக் கொண்டார்.