எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாளை முன்னிட்டு சீர்காழி அருகே பெருந்தோட்டத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழகத்திலேயே முதல் முறையாக திறக்கப்பட்ட சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மீனவ மக்கள் அரசுக்கு கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கிராம கடை வீதியில் அமைந்துள்ளது சிங்காரவேலர் சிலை இது 1985 அப்போது எதிர்க்கட்சித் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் முதன்முதலாக சிங்காரவேலருக்கு திறக்கப்பட்ட சிலையாகும்.
சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் உள்ள அயோத்தியா குப்பத்தில் மீனவ குடும்பத்தில் பிறந்தவர் பொதுவுடமை சிந்தனைகளை தமிழகத்தில் பரப்ப இவர் ஆற்றிய பணிகளுக்காக சிந்தனை சிற்பி சிங்காரவேலர் எனும் சிறப்பு பெயர் உருவானது மகாத்மா காந்தி மூதறிஞர் ராஜாஜி அண்ணல் அம்பேத்கர் போன்றவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்
இதன் மூலம் பொதுவுடமையை நாடெங்கும் பரப்பும் பணியில் தீவிரம் காட்டியவர் அன்றைய சாதி கட்டுப்பாடுகளையும் சமூக அமைப்புகளையும் உடைத்தெறிந்து விட்டு 1894 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் பிஏ பட்டமும் பெற்றதுடன் சட்டக் கல்லூரியில் பயின்று பி எல் பட்டமும் பெற்றார்
இது அப்போது என்பது மிகப்பெரிய சாதனையாகும் 1918 இல் சென்னை தொழிலாளர் சங்கத்தை துவங்கியவர் மா சிங்காரவேலர் இதுவே இந்தியாவின் முதல் தொழிற்சங்கமாகும் கிராமம் கிராமமாக சென்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியறிவு பெற உழைத்தவர் தன்னுடைய திரளான சொத்துக்களை தேசமெங்கும் பரவி கிடந்த தொழிலாளர் தோழர்களுக்காக வாரி இறைத்தவர் தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதியாக கருதப்படும் சிங்காரவேலர் தொழிற்சங்கவாதியான மே தினத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் இவ்வளவு பெருமை மிகுந்த சிங்காரவேலருக்கு முதன் முதலாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் திருவுருவச் சிலை அமைத்து 1985 ஆம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் திறக்கப்பட்ட சிலை இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது
இன்று சிங்காரவேலரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மீனவ கிராம மக்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மீனவர்கள் சார்ந்த கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தனர் சிங்காரவேலரின் மீது முத்தமிழறிஞர் கலைஞர் கொண்ட அன்பின் காரணமாக அவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டது
அவரது வழிவந்த தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் சிங்காரவேலரின் சொத்துக்களை மீட்டு எடுத்து அவரது புகழைப் பரப்பும் வகையில் வாழ்க்கை வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக மணிமண்டபம் அமைக்க வேண்டும் குறிப்பாக சிங்காரவேலரின் சொத்துக்கள் வெள்ளையர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது பொது சொத்துக்கள் என பல்வேறு பெயர்களில் உள்ளது
அதனை அரசு கையகப்படுத்தி அதற்கு சிங்காரவேலரின் பெயரை வைக்க வேண்டும் மேலும் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நான்கு மாதங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டதுடன் பல கோடி ரூபாய் பொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளது இதனை தடுப்பதற்கு ஒன்றிய அரசு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என சிங்காரவேலர் பிறந்த நாளில் மீனவ மக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்நிலையில் பா. அங்குதன் (திமுக மாவட்ட இலக்கிய அணி) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தங்கராஜ்,இளங்கோவன், சுப்பிரமணியன் மற்றும் பாலு,
இளையராஜா,முகமது பசீர்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்