மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
மயிலாடுதுறை முட்டம் கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், முன்னாள் தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத் அறிவித்திருந்தபடி ரூ.50,000 நிதிஉதவியை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு அணியினர் வழங்கினர்:- ரவீந்திரநாத் செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல்:-
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஹரீஸ், ஹரிசக்தி ஆகிய இரண்டு இளைஞர்கள் பிப்.14-ஆம் தேதி சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு தேனி முன்னாள் எம்.பியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ப.ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்து பிப்.16-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டார்.
“கொலை, கொள்ளைகள், வன்முறை, கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை: தமிழ்நாட்டில் சட்டஒழுங்கை நிலைநிறுத்த தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனம்” என்ற தலைப்பில் அவர் அந்த வெளியிட்ட அறிக்கையில், கொலையான இருவரது குடும்பத்தினருக்கும் ரூ.50,000 (தலா ரூ.25000) நிதிஉதவி வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் நிர்வாகி வீரமணி என்பவரின் ஏற்பாட்டில் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் பாலுபாரதிராஜா, சீர்காழி சுசீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த உதவித்தொகையை இருவரது குடும்பத்தினருக்கும் வழங்கினர். அப்போது, அவர்களது குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்ட முன்னாள் எம்.பி. ப.ரவீந்திரன் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.