கரூர் செய்தியாளர் மரியான் பாபு


தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையில், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கே. கார்வேந்தன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் நளினி சிறப்புரையாற்றினர்.
மகளிர் அணி மாவட்ட தலைவர் பிரியா ஈஸ்வரன் வரவேற்புரையாற்றி தொடங்கி வைத்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் மகேஷ் நன்றியுரை கூறினார் மாவட்ட துணைத் தலைவர்கள் சக்திவேல்முருகன், ஆறுமுகம்,மாவட்ட பொது செயலாளர்கள் ஆர்.வி.எஸ் செல்வராஜ், சாமித்துரை, மாவட்ட செயலாளர்கள் முருகேசன், வெங்கடாசலம், கரூர் மத்திய மாநகரத் தலைவர் சரண் ராஜ்,மேற்கு மாநகரத் தலைவர் ராமமூர்த்தி, தெற்கு மாநகர தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய , நகர, கிளை நிர்வாகிகள், அணி & பிரிவு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு இந்த தீய சக்தி திமுகவிற்கு எதிரான ஆட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *