நெமிலியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை திறப்பு விழா நண்டு பிராண்ட் லுங்கி தொழிலதிபர் கடிகாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைப்பு :-
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பேரூராட்சி பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலருமான ஸ்ரீ மாதங்கி டெக்ஸ்டைல்ஸ் பி லிட் (ம) நண்டு பிராண்ட் லுங்கி நிறுவனருமான V.S.கடிகாசலம் கலந்துகொண்டு புதிய கிளையினை ரிப்பன் வெட்டிகுத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்நிகழ்விற்கு முன்னிலை வகித்தார் மண்டல மேலாளர் வேலூர் என்.ராஜசேகர் வரவேற்புரை நிகழ்த்தினார் நெமிலி கிளை மேலாளர் கிரண்குமார் காந்தா ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்