தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்த மூத்த தம்பதியினருக்கு அறநிலையத்துறையின் சார்பில் மரியாதை செய்யப்படும் என்று அறிவித்தார் அந்தத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின் பெயரில் இந்து சமய அறநிலையத்துறையினர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் மூத்த தம்பதியினருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
அதன்படி தூத்துக்குடி பாகம் பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் வைத்து மூத்த தம்பதியினருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமை தாங்கினார்.
திருக்கோவில் வளாகத்தில் வைத்து 24 மூத்த தம்பதியினருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு தம்பதியினருக்கும் ஒரு வேஷ்டி. பட்டுச்சேலை. மற்றும் பல்வேறு வகையான பிரசாதங்கள் தம்பதியினருக்கு மாலை அறநிலையத்துறையின் சார்பில் வழங்கப்பட்டது
ஒவ்வொரு தம்பதியினருக்கும் தனித்தனியாக மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர். கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி. கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி மற்றும் அறநிலையத்துறையினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இணை ஆணையர் அன்புமணி கூறுகையில் தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் அறிவித்த மூத்த தம்பதியினருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆலோசனையின்படி இன்று நடைபெற்று வருகிறது தூத்துக்குடி தென்காசி மண்டலத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது
500 தம்பதியினருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடத்த அறநிலைத்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது இன்று 24 மூத்த தம்பதியினருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது வரும் வாரங்களில் தொடர்ந்து மூத்த தம்பதியினருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி கூறினார்