திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட வ.சோ.அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது .
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு 19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
முன்னதாக தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இந்த உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், பள்ளி மாணவர்கள் என அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் சங்கீதா, நகர் மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் குருதேவ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.