தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கத்தை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்
இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளர்களின் ஒரு அங்கமான தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுவதை தரமாக உணவு பரிமாறப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தும் அவர்களுக்கு எளிய முறையில் தேவையான உணவுகளை கேட்டறிந்து பரிமாறியும் அவர்களுடன் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் அமர்ந்து உணவு அருந்தியும உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் து. உமா சங்கர் சுகாதார அலுவலர் அரசகுமார் திமுக வழக்கறிஞர் துரை நெப்போலியன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்