அக்கா.. தம்பி பதவி சண்டையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பறிபோகிறது. பிஜேபி மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா பரபரப்பு பேச்சு.
தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மகளிர் அணியினர் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி அண்ணா நகர் மெயின் ரோட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் தமிழக பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் சசிகலா புஷ்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.