இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 70 வயது கடந்த மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிவிப்பினை நடைமுறைப்படுத்திடும் வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 43 ஜோடி மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பயனாளிகளான 43 ஜோடி மூத்த தம்பதியினருக்கு அறநிலையத்துறையின் சிறப்பு தொகுப்பினை வழங்கினார். வேட்டி, சட்டை, சேலை, மலர் மாலை, வெற்றிலை பாக்கு, மஞ்சள் குங்குமம், தாலி கயிறு, பழங்கள், கண்ணாடி வளையல், சில்வர் தட்டு, ஆகிய பொருட்கள் அடங்கிய ரூ.2500 மதிப்புள்ள பொருட்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இதில் இணை ஆணையர் அனிதா, கோயில் செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் சீனிவாசன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *