தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில், தாராபுரம் அண்ணா சிலை அருகே தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அவைத்தலைவர் பி.கே.ராஜ், மாவட்ட பொருளாளர் சின்னப்பன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் காளிதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித் தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *