தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் வருகின்ற 15/02/2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் அதிகாலை 5.30 மணிவரை மகாசிவராத்திரி நான்கு கால பூஜை வழிபாடு முதல் கால பூஜை இரவு10 மணி இரண்டாம் கால பூஜை இரவு 12 மணி மூன்றாம் கால பூஜை இரவு 2மணி நான்காம் கால பூஜை பிரம்ம முகூர்த்தம் பூஜை 4 நான்கு மணியளவில் நடைபெற இருக்கின்றது. சித்தர்கள், ரிஷிகளும் கைலாசநாதர் மலையை சுற்றி சூட்சமமாக வந்து கைலாசநாதரை வழிபடுகிறார்கள் என்று சான்றோர்கள் ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.

மகாசிவராத்திரி இந்த இனிய சிவராத்திரியில், கூட்டு வழிபாட்டுடன் தேவாரம், திருவாசகம், பாடி இறைவனை போற்றி வழிபடுவோம் . திருவண்ணாமலை அருளால் கைலாசநாதர் மலைக்கோயிலில் 2001-ல் மாசி மாதம் பெளர்ணமி கிரிவலமும் 2002-ல் மகா சிவராத்திரி விழாவும் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர்கள் கைலாசநாதர் அருளால் ஆரம்பித்தார்கள் பக்தர்கள் பாதையை இல்லாத போது மலையை சுற்றி கிரிவலம் வந்து தரிசனம் செய்த இந்த மலை இன்று பல்லாயிரம் பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசனம் செய்கின்றார்கள்.

கைலாசநாதர் மலைக்கோயில் உள்ள “கைலாசநாதர் என்றால் தியான நிலையில் இருப்பவர். ” பக்தியுடன் தரிசனம் செய்ய வருகைதரும் பக்தர்களின் எண்ணம் செயல்,மனதை அறிந்து அருள்புரிந்து வருகிறார்.

பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகிறது என்று இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். மகாசிவராத்திரி விழா அன்று குழுவின் சார்பாக ஐந்து முகம் ருத்ராட்சம் வழங்கபடும். இரவு 7 மணி முதல் அன்னதானமும் பிரசாதமும், சுக்கு மல்லி காபியும் வழங்கபடும் அது சமயம் பக்தர்கள் இறையருள் பெற வருகை தருமாறு அன்புடன் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவின் சார்பாக அழைக்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *