வந்தவாசி,

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரித் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையேற்று குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தமிழே உலக மொழிக்கு எல்லாம் தாய்மொழி என்றும், தமிழ் பயின்றால் அனைத்து துறைகளிலும் முன்னேற இயலும் என்றும் வலியுறுத்தினார். மேலும் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை மிகுந்த விழிப்புணர்வோடு எதிர்கொள்ள வேண்டும் என்றும் தற்போதைய தொழில்நுட்ப அறிவை பெற மடிக்கணினியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசு எந்த நோக்கத்திற்காக கணினியை வழங்கியதோ அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மேனாள் ஏடிஎஸ்பி எ. ஜம்புகுமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக இயக்குநர் பா.போஸ், கல்லூரிப் பொருளாளர்.எஸ்.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை வரவேற்றார். நிறைவாக வேதியியல் துறைத்தலைவர் முனைவர் பிரதீப் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர்கள் அப்பாண்டைராஜன், ஆனந்தன், இராதா, மணி, சங்கரன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் செய்திருந்தார். நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *