இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் முன்பு சாலையை கடக்க உதவிக்கு யாரும் இல்லாததால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் ஒருவரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இந்த பள்ளி இருக்கு இலக்கியம்பட்டி, செந்தில் நகர், அண்ணாநகர், அழகாபுரி, கலெக்டர், பாரதி புறம், ஆகிய பகுதியிலிருந்து பள்ளி மாணவ மாணவிகள் வருகின்றனர்.

தர்மபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்தில் இந்த பள்ளி அமைந்து உள்ளது. இதனால் எந்தநேரமும் இந்த பள்ளியின் சாலையானது அதிக வாகன நடமாட்டத்துடன் போக்குவரத்து நெருக்கடியுடன் பரபரப்பாகவே காட்சியளிக்கும்.

இந்த நிலையில் இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் பள்ளி விடப்படும் மாலை நேரங்களிலும் மாணவிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து போலீசார் ஒருவரை பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும் சாலையில் உள்ள வேகத்தடை அருகில் பேரிக்காடுகள் அமைக்க வேண்டும் என்று பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் இலக்கியம்பட்டி இளைஞர்கள் , சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *